Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா வந்தாலும் பரவாயில்லை…. “மாஸ்க் அணிய போவதில்லை” வைரலாகும் சர்ச்சை கருத்து….!!

ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மாஸ்க் அணியததற்காக கூறிய காரணம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தளர்வுகளின் அடிப்படையில், ஒரு சில பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,

சினிமா துறையை பொறுத்த வரையில், சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னத்திரையை போல் வெள்ளி திரை படப்பிடிப்புக்கும்  தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். திரைபடங்களை  திரையரங்குகளில் தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. OTT,  டிஜிட்டல் தியேட்டர் என அனைத்து வழிகளிலும் திரையிட வேண்டும் என்றார்.

மாஸ்க் அணியாமல், செய்தியாளர்கள் முன்னிலையில் இத்தனை கோரிக்கையையும் அவர் முன் வைக்க, மாஸ்க்  அணியாதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், மாஸ்க் அணிவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே கொரோனா  வந்தாலும் பரவாயில்லை, அதை அணிவதில்லை என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில், பொதுவாக பாதிக்கப்பட்டவரிடமிருந்து, மற்றவருக்கு கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மட்டுமே மாஸ்க் அணிகிறோம். பொது நலத்துடன் செயல்படுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |