மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே நேரத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல எந்த தடையும் இல்லை என்றும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
அதே போல நீச்சல் குளம், திரையரங்கம், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்க உத்தரவு மாநில அரசு அமல்படுத்தலாம் என்றும், பிற பகுதிகளில் மத்திய அரசிடம் ஆலோசனை பெறாமல் பிற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலங்களில் பல்வேறு மாநில அரசுகள் மாநிலத்தின் சூழ்நிலைக்கு ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்து வந்த நிலையில் தற்போது மாநிலத்திற்குள் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர பிற பகுதிகளில் மாநில அரசு பொதுமுடக்கத்தை அறிவிக்க கூடாது என்றும் மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.