Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை – அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது.

நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடனுக்கான தவணையை வங்கிகள் வசூலிக்காமல் நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி மேலும் நீடிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் அதை நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

Categories

Tech |