செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர்.
கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து உள்ளதாக காவல்துறை வட்டாரங்கல் தெரிவிக்கின்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கபடவில்லை.