நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் எம்.பி.ஏ. படித்தும் உரிய சம்பளத்தில் வேலை கிடைக்காததால் தனது சொந்த நிலத்தில் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தோடு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறார்.
கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் பாரம்பரிய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மகன் அபிமன்யு எம்.பி.ஏ. படித்து முடித்து கோவை சென்னை உட்பட பெருநகரங்களில் பணி கிடைத்தும் உரிய ஊதியம் கிடைக்காததால் விரக்தியில் ஆழ்ந்திருந்தார்.
இன்நிலையில் கொரோனா ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கே திரும்பிய அபிமன்யு தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட திட்டமிட்டு சுமார் பத்து ஏக்கரில் பூண்டு விவசாயம் செய்து அதிக வருமானத்தை ஈட்டி வருகிறார். பூண்டு கிலோவுக்கு 230 ரூபாய் வரை கிடைப்பதால் போதுமான லாபம் கிடைப்பதாக கூறுகிறார் அபிமன்யு. இது மட்டுமின்றி காய்கறிகள் ஆரஞ்சு, முள்சீதா, உள்ளிட்ட பழ வகைகளையும் பயிரிட்டுள்ள அபிமன்யு நூற்றுக்கும் மேற்பட்டவர் களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறார்.