Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு வெளியிட்ட… “4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு”… தமிழகம் பின்பற்றுமா…??

மத்திய அரசு வெளியிட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் பின்பற்றுமா என கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு பற்றிய சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு, தொடங்க உள்ள நாலாம் கட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இபாஸ் முறை கூடாது என்றும் மாநில அரசுகள் தனியாக ஊரடங்கை அறிவிக்கக்கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்டங்களுக்கு இடையே உள்ள தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடங்க  வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடுசெய்யவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி நெருக்கடியில் உள்ள தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் பல ஊரடங்குத் தளர்வுகளை இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |