தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார்.
பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது
இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது. பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும. உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம். கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.
உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது, குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.