அமுல் நிறுவனம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த இணையங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரை வைத்து, மோசடி செய்யும் நபர்கள் போலியாக அமுல் நிறுவனத்தின் பெயரில் இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் பெற்றுத்தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மக்கள் அமுல் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.
மேலும் இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த கொண்டே இருந்தது. இது சார்பாக அமுல் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அமுல் நிறுவனம் பெயரில் இயங்கும் போலி வலைத்தளங்களை உடனடியாக முடக்கம் செய்ய வேண்டும் என தொலை தொடர்பு துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இனி அமுல் நிறுவனத்தின் பெயரில் புதிதாக இணையதளங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.