தீவிர மன அழுத்ததால் சிறுமி ஒருவர் தனது தாயையும் சகோதரியையும் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டவர். ஆனால் லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது கையை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வசனத்தை ஜாம் மூலம் குளியலறை கண்ணாடியில் எழுதி வைத்துள்ளார். அதன் பிறகு, கோபத்தில் அந்த கண்ணாடியைத் துப்பாக்கியால் சுட்டு உடைத்து விட்டு, அங்கு குளித்துக்கொண்டிருந்த தனது தாய் மற்றும் சகோதரனின் தலை பகுதியில் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் சிறுமி தனது குற்றத்தை தன் பாட்டி முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், உடைந்து போன கண்ணாடியில் எழுதப்பட்ட எழுத்துகளும் சிறுமியின் நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்ட எழுத்துகளும் ஒரே மாதிரி இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் இறந்து கிடந்த இடத்தில் சிறுமியின் .22 காலிபெர் துப்பாக்கியையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
சிறுமி ஏன் இவ்வாறு தனது சகோதரனையும், தாயையும் கொடூரமாக சுட்டுக்கொன்றார் என்பது இப்பொழுது வரை உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும், சிறுமி தீவிர மன அழுத்தத்தால் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் இப்போது உத்திரப் பிரதேசத்தையே அச்சுறுத்தி உள்ளது!