தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கிறது. இதனால் நேற்று இரவே மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொருத்தே மாநில அரசுகளும் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவிக்கின்றனர்.
நான்காம் கட்ட தளர்வுகளின் பகுதியாக பேருந்து, ரயில் சேவைக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து அனுமதி, இ-பாஸ் ரத்து, ஞாயிறு ஊரடங்கு ரத்து, மெட்ரோ ரயிலுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.