Categories
தேசிய செய்திகள்

“டெல்லி – ஆக்ரா” வழித்தடத்தில்… 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன…!!

டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வண்டிகளில் 5 பெட்டிகள் விபத்துக்குள்ளானது.

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பொது போக்குவரத்தான பேருந்துகள் விமானங்கள் ரயில்கள் போன்றவை  முடக்கப்பட்டு உள்ளது ஆனால் சரக்கு ரயில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயில்கள் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று, சரக்கு வண்டியில் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.

இந்த சரக்கு வண்டியானது, காஜியாபாத்தில் இருந்து வல்லப்கார் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.  ஆக்ரா- டெல்லி  வழித்தடத்தில் விருந்தாவன் சாலை-ஆலை ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் வந்தபோது 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த திடீர் விபத்தில் யாரும் காயமடையவோ? அல்லது உயிரிழக்கவோ? இல்லை. அதன்பின் சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள் வந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Categories

Tech |