இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன
2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
முன்னாள் சாம்பியன் மும்பை அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகள் விளையாடி 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.கடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 187 ரன்கள் குவித்தும், பட்லர் ( 89 ரன்கள்) அதிரடியால் வெற்றி கை நழுவி போனது. கடந்த ஆட்டத்தில் பில்டிங்கின் பொது அல்ஜாரி ஜோசப்பிற்கு தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக மலிங்கா களமிறங்க வாய்ப்புள்ளது.
பெங்களூரு அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகள் விளையாடி 6 வெற்றியும், 1 தோல்வியும் பெற்று புள்ளி புள்ளி பட்டியலில் கடைசி 8 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கோலியும், டிவில்லியர்ஸும் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தனர். பவுலிங்கில் சாஹல் சிறப்பாக பந்து வீசி இந்த சீசனில் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தி அசத்தி வருகிறார். மற்ற வீரர்களும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமாகும்.
மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் பெங்களூரு அணி 6 ரன்களில் வெற்றியை பறி கொடுத்தது. எனவே இன்றைய போட்டியில் பழி தீர்க்க தயாராகிக்கொண்டிருக்கிறது. பெங்களூரு அணி வரக்கூடிய எல்லா போட்டியிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஆகவே இன்றைய போட்டியில் பெங்களூரு அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. மும்பை அணியும் வெற்றிக்கு போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இரண்டு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை அணி 15 முறையும் , பெங்களூரு அணி 9, முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.