Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு 4.O”… புதுச்சேரியில் என்னென்ன தளர்வு…!!

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையேயான இ – பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதனைப் பின்பற்றும் வகையில் புதுச்சேரியில் இ – பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4ஆம் கட்ட ஊரடங்கில் முதற்கட்டமாக, இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் மேலும், மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள உத்தரவுகள், மற்றும் தளர்வுகளை புதுச்சேரி அரசு ஏற்று நடக்கும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |