அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63. படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்த அணியின் கேப்டனாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்து வருகிறார் நடிகை இந்துஜா. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து நிலையில் இந்த படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.