பணம் மோசடியை தவிர்க்க மத்திய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாளவுள்ளது.
சமீப காலமாக வங்கிகளில் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களது பணம் திருடப்பட்டுவருகிறது. இதனை வித்தியாசமான தொழில்நுட்பம் மூலம் மோசடியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் தனிநபர் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய மோசடிகள் குறித்தும், பணத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்தும் உடனுக்குடன் இமெயில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் அரசு தெரிவிக்கும் அனைத்து தகவல்களையும் படித்து விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பம் ஏராளமாக வளர்ந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அனைவரையும் கண்காணிக்க முடியாது. மக்கள்தான் அரசு தெரிவிக்கும் நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினாலே போதும். இதை செய்தாலே பல மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.