கொரோனா ஊரடங்கால் சுதந்திரம் பறி போவதாக கூறி ஜெர்மனி நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆரம்ப காலகட்டத்தில் இந்த வைரஸின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்த வைரஸால் அந்நாட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மரணமடைந்தனர். இதையடுத்து பாதிப்பைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு கடுமையாக விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அந்நாட்டுப் பகுதிகளில் தற்போது குறைந்து வந்தாலும், ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்த அந்நாட்டு அரசு முன்வரவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜெர்மனியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். அதில், கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு மூலம் தங்களின் சுதந்திரத்தை அரசு பறிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.