தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கால் போக்குவரத்து வசதியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு அல்லது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு அல்லது வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில் இ பாஸ் நடைமுறை முக்கியமான நிபந்தனையாக இருந்தது. சமீபத்தில் மத்திய அரசு இ பாஸ் உள்ளிட்ட போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை மாநிலங்களுக்குள்ளும், வேறு மாநிலங்களுக்கு பயணிக்க விரும்பும் மக்களுக்கும் விதிக்கக்கூடாது என அறிவுறுத்தியது. அதன்படி,
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இ பாஸ் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்த அவர், மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் முறையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளார்.