தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்திற்க்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீக்கப்படுகிறது.
விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதிவரை செயல்பட தடை. ஞாயிற்றுக்கிழமை அமல் படுத்தப்படும் தளர்வில்லா முடக்கம் செப்டம்பர் முதல் ரத்து செய்யப்படுகிறது.சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மாவட்டத்தின் அனுமதியுடன் இ – பாஸ் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.