தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்கும் வசதி கூடிய ஹோட்டல், ரிசார்ட், கேளிக்கை விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய, பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.