கொரோனா காலகட்டத்திலும் இந்திய ஆசிரியர்கள் சவாலான பணிகளை மேற்கொள்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் புதிய கல்விக் கொள்கை என்பது சிறப்பான ஒன்று என பிரதமர் மோடி சுட்டிக்காட்டி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.அதாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பேசும் பொழுது, “புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றதை தரப்போகிறது. இந்தக் கொடிய கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளனர். வெளியில் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி ஆசிரியர்கள் மாணவர்ளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும் தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் கூட இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.