ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று முக்கியமான செயலில் கவனம் கொள்வீர்கள்.
அனுகூல சூழ்நிலை அமைந்து நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்திவீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம் கவனமாக இருங்கள். பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதேபோல எந்த ஒரு காரியத்தையும் தன்னிச்சையாகவே முடிவு செய்வீர்கள்.
கூடுமானவரை முக்கியமான காரியங்களில் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். மனைவியிடமும் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். வெற்றி கண்டிப்பாக உங்கள் பக்கம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை சுமுகமாகவே இருக்கும். எப்பொழுதும் போலவே மாலை நேரங்களில் சிறு உடல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் மிகவும் நன்றாக இருக்கும். உணவு விஷயங்களில் கூட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள். அதேபோல் இன்று தன வரவு சுமாராக தான் இருக்கும். கவலையில்லை மனம் திருப்திகரமாகவே அதை ஏற்றுக் கொள்ளும். இன்று உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல செய்திகள் இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் நீல நிறம்.