Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரூ 40 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க பிரமுகர்… பறக்கும்படையினர் அதிரடி…!!

திருச்செந்தூரில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா  செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செயப்பட்டது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலுக்கு வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில்  உள்ள காயமொழி மத்திமான்விளை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொட்டங்காடு திமுக பொதுக் குழு உறுப்பினர் வசிகரன் மற்றும் அவரது மகன் அஜித்தும் காரில் அந்த வழியாக சென்றன. அவரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்பொழுது அவர் வாகனத்தில் ரூ 40 லட்சம் பதுக்கிவைத்தது சோதனையில் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வாசிகரன்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன .

Categories

Tech |