கும்பம் ராசி அன்பர்களே…!
தயவுசெய்து உங்களுடைய கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பணவரவு தான் கிடைக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து தான் உண்ண வேண்டும். எதிர்பார்த்த செய்தி வருவதற்கு தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் கொடும். யாரிடமும் இன்று கடனாக பணத்தை பெற வேண்டாம். பொறுமையையும் நிதானத்தையும் மேற்கொள்ளுங்கள் அதுபோதும். இன்று குடும்பத்தில் அமைதி பெறுவதற்கு கொஞ்சம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதுமானது. யாரிடமும் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. தேவையில்லாத சிறு தொல்லைகள் ஏற்படும் கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. யாரிடமும் தயவுசெய்து இன்று வாக்குவாதங்கள் வேண்டாம்.
வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். உயரதிகாரிகளிடம் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். சகோதர வகையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.