மீனம் ராசி அன்பர்களே..!உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
உங்களுடைய செயல்களின் பலன் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் செய்க அணுகுலக் காரணி பலம்பெரும். நிலுவைப்பணம் வசூலாகும். அன்புக்குரியவர்களை சந்திக்கக்கூடும். இன்று வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சோம்பல் நீங்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். சிலருடைய பேச்சு உங்களுக்கு மனதை மகிழ்விக்கும். மிக முக்கியமாக பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பண விஷயங்களில் யாரிடமாவது பதில் சொல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள், அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். அதேபோல உங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உழைப்பு அதிகரிக்கும்.
பயணங்களால் வீண் செலவு உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். இன்று கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் இருந்தால் போதுமானது, உங்களுடைய மனம் ஓரளவு அமைதி பெறும். அதேபோல யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். காதலர்கள் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பேச்சில் மிக முக்கியமாக கோபங்கள் இல்லாமல் பேச வேண்டும். வாக்குவாதங்கள் தயவுசெய்து வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது மிக நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.