திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் மற்றும் உறவினர்கள் எல்லாம் ராணியை தேடி கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றபோது அங்கு தேங்கியிருந்த குட்டை நீரின் கரையோரம் உடலில் துணியில்லாமல் உயிரற்ற சடலமாக ஹெலன் ராணி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போய் இருப்பதையும் புரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஹெலன் ராணியின் கணவரான அருள்ராஜ் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வர அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஹெலன் ராணியை அருள்ராஜ் தான் கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து சென்றார் என்பதும், அங்கு இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை நீரில் மூழ்கடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.