மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் பள்ளிகள் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பெற்றோர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை அளித்துள்ளது.