உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற தண்டனை விவரம் தொடர்பான விசாரணையின் போது தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷன் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நிறைவடைந்து, கடந்த 25ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன்னுக்கான தண்டனை விவரம் , தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.