திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணமகள் புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகன் பெண்ணுக்கு தாலி கட்ட தயாரானான். அப்போது நன்றாக மது அருந்திவிட்டு வந்த வம்சி என்ற இளைஞன் நான் திவ்யாவின் காதலன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு மணமகன் மற்றும் குடும்பத்தினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு திவ்யா குடிபோதையில் வந்த வம்சியுடன் செல்ல தயாரானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க அவர்கள் மணமகன், திவ்யா மற்றும் வம்சி ஆகிய 3 பேரையும் விசாரித்தனர். அப்போது திவ்யா தான் காதலித்த வம்சியுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் மணமகனாக பிரவீன்குமார் குடிபோதையில் வந்த வம்சீ தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக என புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து திவ்யாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வம்சியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.