டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும்பொழுது வங்கிகளிலிருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று நிதித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாததால் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பணங்களை பெற்று வாங்கும் பொருட்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பணம் செலுத்தி வாங்கும் பொழுது வங்கிகளிலிருந்து புதிதாகக் கட்டணம் வசூலிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால் வங்கிகள் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு, வங்கிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நிதி அமைச்சகம் கூறியுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.