Categories
தேசிய செய்திகள்

தடையை மீறி ஊர்வலம்… போலீஸ் துப்பாக்கிச்சூடு…!!

மொகரம் பண்டிகைக்கு அரசு போட்டிருந்த தடையை மீறி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பொது முடக்கத்தால் மக்கள் பல்வேறு விழாக்கள் போன்றவற்றை கொண்டாட முடியாமல் வீட்டிலிருந்தவாறு எளிமையாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் மிக எளிமையாக ஊர்வலம் எதுவும் இல்லாமல் கொண்டாடப்பட்டது. ஏனென்றால் அரசு ஊர்வலம் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது. தற்பொழுது நடைபெற்ற மொகரம் பண்டிகைக்கு அரசு முன்னதாக கூறியதுபோல் ஊர்வலம் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது அதையும் மீறி ஊர்வலம் சென்றவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அதாவது மொகரம் பண்டிகை அன்று, ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் மொகரம் துக்கநாளை அனுசரிக்க ஒன்று கூடியபோது, பாதுகாப்பு கருதி அதற்கு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நிலவியது. ஒன்று கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கிகளில் பெல்லட் குண்டுகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் இந்த நிகழ்வில் ஊர்வலம் செல்ல முயன்ற ஏராளமானவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இத்தகைய தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |