மக்களுக்கு வங்கிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றாக பொருளாதார இழப்பு உள்ளது அதாவது வங்கிகளில் மக்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளனர். இதனை தீர்க்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு முன்னால் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி சமீபத்தில் கடன் தீர்வு திட்டத்தை வெளியிட்டு இருந்தது.
இந்த தீர்வு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் கடன் அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரச்சினைகள் குறித்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் வருகிற செப் 3-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் விரைவான செயலாக்கத்துக்கு தீர்வு காண வேண்டிய சிக்கல்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.