2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் வீரர்களை தேர்வு செய்து விட்டது.
இந்நிலையில் இந்திய அணி 15 வீரர்களாக யாரை தேர்வு செய்யப்போகிறாரகள் என்று மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டத்தில் வீரர்களை தேர்வு செய்தனர்.
உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் :
கேப்டன் விராட் கோலி,
துணை கேப்டன் ரோஹித் சர்மா
ஷிகர் தவன்,
கே.எல் ராகுல்,
விஜய் சங்கர் (தமிழக வீரர்)
எம்.எஸ் தோனி,
கேதார் ஜாதவ்
தினேஷ் கார்த்திக் (தமிழக வீரர்)
யூஸ்வேந்திர சாஹல்
குல்தீப் யாதவ்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரிட் பும்ரா
ஹர்திக் பாண்டியா,
ரவீந்திர ஜடேஜா
முகமது சமி
எம்.எஸ்.கே .பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து வீரர்களை தேர்வு செய்தனர். இக்கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர். அம்பதி ராயுடு, ரிஷப்பன்ட் இருவரும் இடம் பெறவில்லை.சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும் இடம் பெறவில்லை. இந்த உலக கோப்பை போட்டியை சேர்த்து தோனி 4வது உலக கோப்பையில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.