சென்னையில் நாளை முதல் பேருந்தில் பயணம் செய்ய பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்காக நாளை முதல் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து போக்குவரத்துத் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறுகையில், பச்சை போர்டு, பச்சை போர்ட் என தனித்தனியாக பஸ் பாஸ் வாங்கி கொள்ளலாம். விருப்பம்போல் பயணிப்பதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி பாஸ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.