உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் இரண்டு ட்விட்டுகள் உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷண் செய்திருந்தார் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஏற்கனவே அவர் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவருக்கு என்ன தண்டனை வழங்கலாம் ? என்பது சம்பந்தமாக விரிவான விவாதங்கள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் தீர்ப்பானது வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் என்பது விதிக்கப் பட்டிருக்கின்றது. வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த ஒரு ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். ஒருவேளை அவர் செலுத்த தவறினால் அவருக்கு மூன்று மாத காலம் சிறை தண்டனை என்பதும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு இடைக்கால தடை என்பதும் விதிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு தான். பிரசாந்த் பூஷண் எந்த மாதிரியான முடிவெடுக்கப் போகிறார். அபராத தொகையை செலுத்த போகிறாரா ? அல்லது சிறைக்குச் செல்ல போகிறார் என்பது அவர் எடுக்கும் முடிவில் தான் தெரியவரும்.