ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இன்று காலையிலிருந்தே உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்த முக்கியமான வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மற்றொரு மிக முக்கியமான விஷயமாக பார்க்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரிக்கப்பட்டது. முன்னதாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள்.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் தங்களது ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு இருப்பதாகவும், அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை சென்னை நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
இதனால் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்காது என்பது முடிவாகி இருக்கின்றது. மேலும் இந்த வழக்கின் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இருக்கின்றார்கள்.