Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… கூடுதலாக 118 ஆம்புலன்ஸ்கள் இயக்கம்…!!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்திற்கு அதிகப்படியான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கும், மக்களுக்கும் உதவும் எண்ணத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 1005, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வருகின்ற நிலையில், இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 500 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் பேரில் முதல்கட்டமாக, 118 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

உயிர்காக்கும் அவசர வசதிகளை கொண்ட இந்த ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப் பட்டுள்ள நிலையில், இவற்றை கையாள அவசரகால மேலாண்மையில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். 108 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 15,128 அழைப்புகள் வருகின்றன. ஜூலை 31ஆம் தேதி வரை, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக சுமார் 25 லட்சம் கருவுற்ற தாய்மார்களும், சுமார் 25 லட்சம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், மற்றும் இதர 50 ஆயிரம் பேரும் சேர்த்து  ஒரு கோடியே இருபதாயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

Categories

Tech |