Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது – வெளியாகிய திடீர் அறிவிப்பு ..!!

நாளை முதல் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அழைக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் மாவட்டங்கலுக்குள் அரசு,தனியார் பேருந்து போக்குவரத்து இயங்கி கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மராஜ் திருச்சியில் பேசும் போது, 50% இருக்கையுடன் உள்ள  அனுமதியை 100 சதவீத இருக்கையுடன் அனுமதி தந்தால் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி தந்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இல்லையென்றால் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது.

Categories

Tech |