நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் எந்தெந்த நாட்களில் செயல்படும் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில முக்கிய தளர்வகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் குறித்து தமிழக அரசு தற்போது சில முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. வங்கிகள் நம்முடைய பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இடமாகவும், வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் வாங்கவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வங்கிகள் இயங்கக்கூடிய நாட்களைப் பொருத்து, பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நாம் செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர செலவையும் தவிர்க்க முடியும். தற்பொழுது அரசு அறிவித்துள்ள அறிவிப்பில், வங்கிகள் ஒவ்வொரு மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும், 2ஆம் மற்றும் 4ஆம் சனிக்கிழமைகளும் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப் 6, செப் 13, செப் 20, செப் 27 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகள் மூடியிருக்கும். செப்டம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் இயங்காது. இவ்வாறு செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் இயங்குவது குறித்து அரசு தெரிவித்திருக்கிறது.