Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் நேர்ந்த கோர விபத்து.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு..!

சீனாவில் ஏற்பட்ட ஹோட்டல் விபத்தில் 29பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஷாங்க்ஷி மாகாணம் ஜியான்பெங் என்ற நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் இரண்டு மாடிகள் கொண்ட பழமையான ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள்  விழா அந்த ஹோட்டலில் நடைபெற்றது.  விழாவிற்கு முதியவரின் நண்பர்கள் உறவினர்கள் என்று பலர் வந்திருந்தனர்.  திடீரென காலை 9.40 மணி அளவில் ஹோட்டல் இடிந்து  விழுந்ததால் ஹோட்டலில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்துள்ளனர்.இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவலை கொடுத்தனர்.

 மீட்புப் பணி வீரர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடனும்  அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் பல காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாம் கட்ட தகவலாக கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 7 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் மேலும் 21 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோட்டல் இடிந்து விழுந்ததற்கான காரணம்  என்னவென்று உடனடியாக தெரியவில்லை என்றும் இது பற்றிய விசாரணையை தீவிரமாக மேற்கொள்வோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Categories

Tech |