Categories
உலக செய்திகள்

இந்திய உணவகத்தை மூடியதால்…. பாராட்டிய பிரித்தானிய சுகாதாரத்துறை இயக்குனர்…!!

பிரித்தானியாவில் இந்திய உணவகத்தை மூடியதால் அந்நாட்டு சுகாதாரதுறை இயக்குனர் உரிமையாளரை பாராட்டியுள்ளார்.

பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம் பிரித்தானியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த உணவகத்தின் உரிமையாளர் ஷாபிர் ஷிசைன் முடிவு செய்துள்ளார்.

அவரது இந்த முடிவிற்கு அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குனர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அக்பர் உணவகம் சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் உணவகத்திற்கு வருவோருக்கு கொரோனா தொற்று பயத்தை ஏற்படுத்தும் என்பதால் உணவகத்தை மூட உரிமையாளர் முடிவு செய்துள்ளார். ஒரு தொழிலை திடீரென முடக்குவது அவ்வளவு எளிதல்ல, சமூகத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உணவகத்தில் உரிமையாளர் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது.

Categories

Tech |