பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, நாடு முழுவதும் இருப்பதைப் போல தமிழகத்தில் பாஜக தேர்தல் நடவடிக்கை இருக்கும்.பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனை விமர்சித்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மன்னிப்பு கேட்கவேண்டும்.”பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுகிறார்களா?”பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.