Categories
உலக செய்திகள்

இந்தியாவின் புனித இடத்தில் எடுத்த நிர்வாண வீடியோ… சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் நாட்டுப் பெண்….!

பிரான்ஸ் நாட்டு பெண் இந்தியாவின் புனித இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஹெலென் என்ற பெண் கங்கை நதிக்கரையிலுள்ள  லட்சுமன் ஜூலா பாலத்தின் மீது உடைகள் இன்றி நிர்வாணமாக ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள மேரி அச்செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “அந்த வீடியோவை நான் எடுக்கும் பொழுது என்னைச் சுற்றி யாருமில்லை. நாட்டின் வன்முறை தொடர்பான துன்புறுத்தல்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், என்னுடைய ஆன்லைனில் அணிகலன்கள் விற்பனை செய்யும் தொழிலை மேம்படுத்தவும் இவ்வாறு செய்தேன். ரிஷிகேஷில் பக்தர்களின் மனதை புண்படுத்தும்படி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |