கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிரக்கின் மீது பயணிகள் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது..
இதில், தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தனர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அதில், மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.