கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் கிடைக்கும்.
அசையும்-அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலை இருக்கும். திடீர் வெளியேற பயணங்களால் லாபகரமான பலன் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.