இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை இருந்தார் பிரணாப் முகர்ஜி. டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி.
மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார் பிரணாப் முகர்ஜ. அவர் தற்போது உயிரிழந்துள்ளது இந்திய நாட்டிற்க்கே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.