கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும்.
பண வரவுகள் தேவைக்கு ஏற்ற அளவு இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவு அனுகூலமான பலன்களை பெறமுடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.