உடல்நலம் குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மூளையில் இருந்த கட்டி நீக்கப்பட்ட நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தார். இது நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரணாப் முகர்ஜியின் மரணம் செய்தியை அறிந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரணாப் மரணத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், மிகுந்த பக்தியுடன் நாட்டிற்கு சேவை பிரிந்தவர் பிரணாப் என்று அமித்ஷா ட்விட் செய்துள்ளார்.
Deeply anguished on the passing away of former President of India, Bharat Ratna Shri Pranab Mukherjee ji. He was a vastly experienced leader who served the nation with utmost devotion. Pranab da’s distinguished career is a matter of great pride for the entire country.
— Amit Shah (@AmitShah) August 31, 2020