தமிழகத்தில் இன்று நிறுவப்பட்ட 118 ஆம்புலன்சில் ஒன்றின் ஓட்டுனராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே மேற்கொண்டு 500 ஆம்புலன்ஸ் சேவை புதிதாக தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கும் நிலையில் இன்று முதற்கட்டமாக 118 ஆன்லைன் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதோடு நிறுத்தாமல் மேலும் ஆம்புலன்ஸ் வசதிகள் கூடிய சீக்கிரத்தில் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இன்று தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைகளில் ஓட்டுனராக முதன் முறையாக ஒரு பெண் தனது பணியை தொடங்கி உள்ளார்.
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த வீரலட்சுமி கால்டாக்ஸி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அதனால் ஏற்கனவே சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டு அவருக்கு தேனியில் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று முதலமைச்சர் புதிதாகத் தொடங்கிவைத்த 118, 108 ஆம்புலன்ஸ்களில் ஒன்றின் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட வீரலட்சுமி தன் பணியினைத் தொடங்கியுள்ளார்.