Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

“பொங்கல் என்றாலே அம்மாவின் லட்டு தான்” பண்டிகைகளை எண்ணி வருந்தும் பிரபல நடிகை…!

ஊரடங்கினால் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என  பிரபல நடிகை மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார்.

 

பூஜா ஹெக்டே தமிழில் “முகமூடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடிக்கிறார். ஊரடங்கு அனுபவத்தை பற்றி பூஜா ஹெக்டே கூறுகையில் “சினிமா துறையை சார்ந்தவர்கள் எப்போதுமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய பாரம்பரியத்தை தான் பார்க்க முடியும். அங்கு நடக்கும் எல்லா பண்டிகைகளும் நாங்கள் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடுவோம்.

பொங்கல் என்றாலே எனது அம்மா செய்யும் லட்டு தான் நினைவுக்கு வரும். காத்தாடி பறக்க விடுவோம். தசரா பண்டிகையின் போது வீட்டில் கொலு வைத்து பஜனைகள் நடத்துவோம். நான் நடிகையாக இருந்தாலும் கூட ஒன்பது நாட்களும் பஜனையில் கண்டிப்பாக பங்கேற்பேன். ஆனால் தற்போது கொரோனாவால் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை. கொரோனா முடியும் முன்பே அனைத்து பண்டிகைகளும் வீணாகுமோ என்ற வருத்தம் உண்டாகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |