கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்திரப்பிரதேச அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை 594 கிலோ மீட்டர் நீளத்திற்கு 37,350 கோடி ரூபாய் செலவில் கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை உத்திரப்பிரதேச அரசு அமைக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் துவங்கி வருகின்ற 2023க்குள் நிறைவடைய இருக்கும் இந்த திட்டத்திற்காக சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கனவுத் திட்டம் நெடுஞ்சாலை கட்டும் பணி என சென்ற வருட கும்பமேளாவின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆறு வழியாகவும், தேவைப்பட்டால் எட்டு வழியாகவும் அமைய இருக்கும் இந்த அதிவிரைவு சாலை மாநிலத்தில் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் வகை சாலையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.